முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம்: 75.05 அடியாக உயர்வு!

தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.05 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2024 at 8:54 AM
மேட்டூர் அணை.
பகிர்:

தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.05 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisement

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 64,033 கனஅடியாக அதிகரித்துள்ளது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 75.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 37.20 டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலையில் நீடித்தால் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை 100 அடியாக உயரும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வார காலமாக அடிப்பாலாறு செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இங்குள்ள பரிசல் துறைகளிலும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.