முகப்பு
தமிழ்நாடு

புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே

சென்னையில் நாளை புறநகர் மின்சார ரயில்கள் வழங்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2024 at 4:46 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் நாளை (ஜூலை 23) பகல் நேரத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்மூலம், நாளை முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயங்கவுள்ளது.

சென்னையில் நாளை முதல் பகல்நேர புறநகர் ரயில்கள் ரத்து என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

இரவு 10.30 முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27, 28) புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக அறிவிக்கப்பட்ட செய்திக்குறிப்பின்படியே ரத்து செய்யப்படவுள்ளது.

ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14 வரை புறநகர் ரயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படவுள்ளது.

தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே முன்பு அறிவித்திருந்தது.

இதற்கு பதிலாக கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும், கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது சென்னையில் நாளை புறநகர் மின்சார ரயில்கள் வழங்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →