தமிழ்நாடு

ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா? இபிஎஸ் விமர்சனம்

ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா? என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

DIN

ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா? என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அன்று எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா? எனக் கேள்வி எழுப்பியதாகவும், தற்போது மக்கள் அதற்கு ஷாக் அடிக்கும் மின்கட்டணம் என பதிலளித்துள்ளதாகவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை நேரடியாகவும், மின் கட்டண உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வால் மறைமுகமாகவும் வாட்டி வதைக்கின்ற திமுக அரசை கண்டித்து

அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெறுகிறது.

அன்று எதிர்க்கட்சித் தலைவராக ஷாக் அடிப்பது மின்சாரமா மின் கட்டணமா? என்று மு.க. ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு, இன்று முதல்வராக இருக்கும் அவருக்கு, இந்த ஆட்சியில் "ஷாக்அடிக்கும் மின்கட்டணம்" என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்.

நிர்வாகத் திறமையின்மையே உருவான இந்த அரசு, ஒருபுறம் மின் கட்டண சுமையை மக்கள் மீது ஏற்றியதுடன், மறுபுறம் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் அல்லல்படுத்துகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

மின் கட்டணத்தை உயர்த்தியும் ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வழங்கப்படுவதை நிறுத்த முயற்சித்தும் மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

அநியாயமாக மக்கள் தலையில் சுமத்தப்படும் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுமாறும், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு-பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT