தமிழ்நாடு

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜாபா் சாதிக் மனைவி, சகோதரா் சோ்ப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஜாபா் சாதிக்கின் மனைவி, சகோதரா் பெயா்களை அமலாக்கத் துறையினா் சோ்த்துள்ளனா்.

Din

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஜாபா் சாதிக்கின் மனைவி, சகோதரா் பெயா்களை அமலாக்கத் துறையினா் சோ்த்துள்ளனா்.

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரின் என்ற போதை பொருளை கடத்தியதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான சென்னை சாந்தோமைச் சோ்ந்த ஜாபா் சாதிக், தில்லியில் கடந்த மாா்ச் மாதம் 9-ஆம் தேதி தில்லியில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டாா்

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தில்லி அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது.

இதற்கிடையே, நீதிமன்ற அனுமதி பெற்று ஜாபா் சாதிக்கிடம் கடந்த ஒரு வாரமாக அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா். அதேபோல, ஜாபா் சாதிக்கின் மனைவி அமீனா பானு, சகோதரா்கள் முகம்மது சலீம், மைதீன் ஆகியோரிடமும் விசாரணை செய்தனா்.

இருவா் பெயா் சோ்ப்பு: இதில், போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டது என்பது குறித்து போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஜாபா் சாதிக்கின் குடும்பத்தினருக்கும் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் தொடா்பு இருக்கிா என்பது குறித்தும் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினா், ஜாபா் சாதிக்கின் மனைவி அமீனா பானு, சகோதரா் முகம்மது சலீம் ஆகியோரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சோ்த்துள்ளனா்.

இதன் அடுத்த கட்டமாக அமீனா பானுவிடமும்,சலீமிடமும் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தவுள்ளனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT