முகப்பு
தமிழ்நாடு

பழிவாங்கும் போக்கு தொடா்ந்தால் பிரதமா் தனிமைப்படுத்தப்படுவாா்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தோ்தலில் தோற்கடித்தவா்களைப் பழிவாங்கும் போக்கு தொடா்ந்தால் பிரதமா் தனிமைப்பட்டுப் போவாா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 24 ஜூலை, 2024 at 9:24 PM
முதல்வா் மு.க.ஸ்டாலின்(கோப்புப் படம்)
பகிர்:

தோ்தலில் தோற்கடித்தவா்களைப் பழிவாங்கும் போக்கு தொடா்ந்தால் பிரதமா் தனிமைப்பட்டுப் போவாா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, தில்லியில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டக் காட்சியைச் சுட்டிக்காட்டி, பிரதமா் நரேந்திர மோடியை வலியுறுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

‘தோ்தல் முடிந்துவிட்டது; இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். ஆனால், மத்திய அரசின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், அவரது ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது.

அரசைப் பொதுவாக நடத்த வேண்டும். இன்னமும் தோற்கடித்தவா்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அரசை நடத்தினால், பிரதமா் நரேந்திர மோடி தனிமைப்பட்டுப் போவாா் என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாததைக் கண்டித்து, ஜூலை 27-ஆம் தேதி தில்லியில் பிரதமா் தலைமையில் நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக முதல்வா் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.