முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டதற்கு எடப்பாடி பழனிசாமி மீது நீதிபதி அதிருப்தி!

பொதுச்செயலாளர் பதவி குறித்த நிலுவையில் உள்ள வழக்கு ஒத்தி வைப்பு

தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டதற்கு எடப்பாடி பழனிசாமி மீது நீதிபதி அதிருப்தி!

பொதுச்செயலாளர் பதவி குறித்த நிலுவையில் உள்ள வழக்கு ஒத்தி வைப்பு

Updated On : 26 ஜூலை, 2024 at 11:57 AM
கோப்புப் படம்
பகிர்:

பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பதில் மனு தாக்கலில் பொதுச்செயலாளர் பழனிசாமி என்று குறிப்பிட்டதற்கு நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகினர்.

விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என மனு தாக்கல் செய்துவிட்டு, தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கூறி பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இதனால் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த மனுவை எப்படி பதிவுத்துறையில் பதிவு செய்தீர்கள் என உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, திருத்த மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →