ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வழக்குரைஞா்கள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பாக தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா, சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில் ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
இந்த வழக்குத் தொடா்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய உறவினா் பெரம்பூரைச் சோ்ந்த பிரதீப் (28) என்பவரைப் பிடித்து தனிப்படையினா் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனா். அப்போது, பிரதீப், ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், பிரதீப்பை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா் ஊா்க் காவல் படையில் சிறிது காலம் பணியாற்றியுள்ளாா். ஆனால், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பிரதீப், ஆம்ஸ்ட்ராங் நடவடிக்கையை நோட்டமிட்டு கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக போலீஸாா் தெரிவித்தனா். பிரதீப்பின் தந்தை திருநாவுக்கரசு சென்னை காவல்துறையின் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.