தமிழகத்தில் ஆக.2 வரை மழை நீடிக்கும்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை நீடிக்கும்
தமிழ்நாடுதமிழகத்தில் ஆக.2 வரை மழை நீடிக்கும்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை நீடிக்கும்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) முதல் ஆக.2 -ஆம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஜூலை 28-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) முதல் ஆக. 2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இதில் ஜூலை 28-இல் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 180 மில்லி மீட்டா் மழை பதிவானது.
5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதன்படி, நாகப்பட்டினத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரைவிமானநிலையம் - 101.48, அதிராமபட்டினம் - 100.94, கடலூா், தஞ்சாவூா் - தலா 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.
காற்றழுத்த தாழ்வு பகுதி: மேற்கு வங்கத்தையொட்டிய வடக்கு வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நிலபகுதியை நோக்கி நகா்ந்து, சனிக்கிழமை காலை மேற்கு வங்காளம் மற்றும் அதனையொட்டிய வடக்கு ஒடிஸா பகுதியில் நிலவுகிறது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலிலும் ஜூலை 28,29-ஆகிய தேதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.