கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆவடி, திருத்தணி ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, திருத்தணி ,கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை கடற்கரை பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) காலை 10.10 மணி முதல் பிற்பகல் 3.10 மணி வரை ரயில்வே பாராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, திருத்தணி ,கும்மிடிப்பூண்டிசெல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரையிலிருந்து ஆவடிக்கு காலை 10.25 மணி, 10.35, 11.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் மற்றும் மறுமார்க்கமாக ஆவடியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

கும்மிடிபூண்டியிலிருந்து கடற்கரைக்கு காலை 8.50 மற்றும் 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடற்கரை வருவதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா வழியாக ஆவடிக்கு இயக்கப்படும்.

இதுபோல் ஆவடியில் இருந்து பகல் 12.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடற்கரை வராமல் வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை வழியாக சூலூர்பேட்டை சென்றடையும்.

சென்ட்ரல் வரும் ரயில்கள்: திருத்தணியில் இருந்து காலை 8.50 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து காலை 11 மணிக்கும், கடம்பத்தூரில் இருந்து பகல் 12.05 மணிக்கும் புறப்படும் ரயில்கள் கடற்கரை வராமல் சென்னை சென்ட்ரல் (மூர்மார்க்கெட் வளாகம்) வந்தடையும்.

சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு பகல் 12.10 மணிக்கும், திருவள்ளூருக்கு பகல் 1.05 மணிக்கும், பட்டாபிராமுக்கு பிற்பகல் 1.50 மணிக்கும், அரக்கோணத்துக்கு பிற்பகல் 2.25 மணிக்கும் செல்லும் ரயில்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT