கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரவு 10 மணிவரை 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணிநேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

DIN

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மற்றொரு காவல் துறை அதிகாரி தற்கொலை

பத்திரிகையாளர் சந்திப்பில் டீசல் படக்குழுவினர் - புகைப்படங்கள்

உ.பி.யில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000 என்கவுன்ட்டர்கள்! 256 குற்றவாளிகள் பலி!

ஏடிஎம் காா்டு மூலம் நூதன மோசடி: இருவா் கைது

புல்லுவன் பாட்டு... கேரள அரசின் விருதுவென்ற ரிமா கல்லிங்கல் படம்!

SCROLL FOR NEXT