நடிகர் விஜய் (கோப்புப்படம்)
தமிழ்நாடு

வயநாடு நிலச்சரிவு: நடிகர் விஜய் இரங்கல்

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கனமழையின் காரணத்தால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று அதிகாலை 3.00 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,”கேரளத்தின் வயநாடு நிலச்சரிவின் சோகமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் துயரமுற்ற குடும்பத்தினருடன் உள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

SCROLL FOR NEXT