முகப்பு
தமிழ்நாடு

வயநாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் பலி! 30 பேர் மாயம்

வயநாடு நிலச்சரிவில் இதுவரை தமிழகத்தை சேர்ந்த 30 பேர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

Updated On : 31 ஜூலை, 2024 at 6:50 AM
வயநாடு நிலச்சரிவு - A S SATHEESH KOCHI
பகிர்:

வயநாட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மேம்பாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 163 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முண்டக்கை கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

அந்த குடும்பத்தினர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், புலம்பெயர்ந்து முண்டக்கை கிராமத்தில் தற்போது வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

ஒரே வீட்டில் 11 பேர் வசித்து வந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 30 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.