எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை DPS
தமிழ்நாடு

தமிழகத்தில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ் இடங்கள்?

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 9,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன, அக்.1 முதல் வகுப்புகள் தொடங்கும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

DIN

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 9050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய சேர்க்கை இடங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை 2024- 25ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 14 தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட ஜெயிக்கா கட்டடத்தின் கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொறுத்த வரை வடசென்னை மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது.

கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 358 கோடியே 87 லட்சம் செலவில் 2,68, 615 சதுர அடி பரப்பில் ஆறு தளங்களுடன் 12 அறுவை சிகிச்சை அரங்கங்களும் கூட்டு அறுவை அரங்கம் ஒன்று ஆசியாவிலேயே புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஹைபிரிட் அறுவை அரங்கம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த கட்டடத்தில் 441 படுக்கை அமைக்கப்பட உள்ளது.

அதேபோல் இன்றைய தினம் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் காலை 10 மணி முதலாக ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் மருத்துவ தேர்வு குழு மூலமாக முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது. அதற்கான முதற்கட்ட கலந்தாவிற்கான தரவரிசை பட்டியல் 19 தேதி வெளியிடப்பட உள்ளது.

முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கிய பின்னர் அரசுப் பள்ளி மாணவர்கள 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு ஆகியவை 22 ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதி நடைபெறும்.

அதேபோல் எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்களும் ஒரு இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்களும், மூன்று மாநில -தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்களும் மொத்தம் தமிழ்நாட்டின் 9050 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.

அதேபோல் பிடிஎஸ் பல் மருத்துவ படிப்பில் மூன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 1950 இடங்களும் ஆக மொத்தம் 2200 இடங்கள் உள்ளன.

இவற்றுள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்பிபிஎஸ் படிப்பில் 851 இடங்களும் பல் மருத்துவப் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை எனவும் ஆறு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன எனவும் கூறினார்.

மேலும் இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தமிழகத்திலிருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT