தமிழ்நாடு

முதல்வரின் கருத்து நகைப்பை ஏற்படுத்துகிறது: அண்ணாமலை விமர்சனம்

முதல்வருக்கு ஸ்டாலினின் எக்ஸ் பதிவினைப் பகிர்ந்து, அண்ணாமலை கேள்வி

DIN

முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறையில் வளர்ச்சி கண்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சி கண்டுள்ளது; புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு பெறுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் இந்தக் கருத்திற்கு மறுப்பு தெரிவித்து, அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “பள்ளிக் கல்வி முன்னேற்றத்துக்கான மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.5858.32 கோடி. திமுகவின் சாதனைகளாக முதல்வர் ஸ்டாலின் காட்டிக் கொள்ள முயற்சிப்பவை அனைத்துமே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவைதான். உண்மை இப்படி இருக்க, சிறிதும் கூச்சமே இல்லாமல் இவற்றை திமுகவின் சாதனையாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது, நகைப்பை ஏற்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்கான ரூ. 1,000 கோடிக்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு வழங்கியதன் பின்னணி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT