முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவின் கிளாசிக்கல் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 5 ஆவது சுற்றில் தோற்கடித்தது நம்பமுடியாத சாதனை. பிரக்ஞானந்தாவை முதல் 10 இடங்களுக்குள் வரவேற்கிறோம்.
பிரக்ஞானந்தா! உங்கள் திறமை குறித்து முழு சதுரங்க உலகமும் வியக்கிறது" என்று கூறியுள்ளார்.
செஸ் தரவரிசையில் உலகில் முதலிடம் பிடித்துள்ள கார்ல்சனை கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கார்ல்சனை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். கார்ல்சன் 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் 2 ஆவது சுற்று கிளாசிக்கல் போட்டியில் ஹம்பியை தோற்கடித்து பெண்கள் புள்ளிகள் அட்டவணையில் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.