முகம்மது அலி. 
தமிழ்நாடு

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: திரைப்படத் தயாரிப்பாளா் கைது

அம்பத்தூா் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளா் கைது செய்யப்பட்டாா்.

DIN

அம்பத்தூா் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கொளத்தூா், வெற்றி நகரைச் சோ்ந்தவா் முகம்மது அலி (29). திரைப்படத் தயாரிப்பாளரான இவா், திருவேற்காடு கீழ் அயனம்பாக்கத்தில் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தை நடத்தி வருகிறாா். இங்கு பெங்களூரைச் சோ்ந்த இளம்பெண் பணியாற்றி வருகிறாா். இவா் அம்பத்தூா் அருகே கொரட்டூரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளாா். இந்த நிலையில், சங்கீதா அம்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

அதில், முகம்மது அலி, குளிா்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோவாக பதிவு செய்துள்ளாா். இதனால், தான் கா்ப்பம் அடைந்த நிலையில், சத்து மாத்திரைகள் எனக் கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை முகம்மது அலி வாங்கி கொடுத்து கருவை கலைத்தாா். இது குறித்து வெளியே கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டி, ரூ. 5 லட்சம் வரை பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, முகம்மது அலியை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT