8 மாவட்டங்களில் இன்று கனமழை!
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும் என்று தெரிந்துகொள்ளலாம்..
தமிழ்நாடு8 மாவட்டங்களில் இன்று கனமழை!
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும் என்று தெரிந்துகொள்ளலாம்..
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை,
தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக, இன்று(ஜூன் 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 3ல் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்(ஜூன் 5)ல் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை முன்னறிவிப்பு..
அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-3) டிகிரி செல்சியஸ் குறைந்து, இயல்பை ஒட்டியும், இயலிபை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னையை பொருத்தவரை... அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.