தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே 17 உடும்புகள் மீட்பு: 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி அருகே 17 உடும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 17 உடும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள், உடும்பு ரத்தம், கறி, எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு, உணவு தயாரித்தல், மசாஜ் செய்வது போன்ற சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மந்திரம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள்.

இந்த நிலையில், சிக்காரி மேடு கிராமத்திற்கு உயிருள்ள உடும்புகள் கடத்தி வருவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் வனத்துறையினர் கிருஷ்ணகிரி வழியாக சென்ற இரண்டு பேருந்துகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, இரண்டு பேருந்துகளில் 17 உடும்புகள், கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அவற்றை மீட்ட வனத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து உடும்புகள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம், குள்ளத்தூரை அடுத்த ரெக்கம்மாள் சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (35), கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே உள்ள சிக்காரி மேடு கிராமத்தை சேர்ந்த தேவா (28 ), பனகமுட்லு அருகே உள்ள ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மூலம் மேலும் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உயிருடன் மீட்கப்பட்ட 17 உடும்புகள், கிருஷ்ணகிரி அருகே உள்ள காப்பு காட்டில் விடுவிக்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT