ANI
தமிழ்நாடு

திமுகவுக்கு 38... விருதுநகரில் இழுபறி; தருமபுரியில் பாமக முன்னிலை!

விருதுநகரில் விஜய பிரபாகரன், மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி 38 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே இழுபறி நீட்டித்து வரும் நிலையில், தருமபுரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக நட்சத்திர வேட்பாளர்களான அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் காலைமுதல் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் பாஜக வேட்பாளரைவிட 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து வேட்பாளர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர். கூட்டணி சார்பில் விருதுநகரில் போட்டியிடும் தேமுதிக விஜய பிரபாகரனுக்கு, காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் கடும் போட்டியாக உள்ளார்.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 35 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் எனவும், பாஜக 3 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திமுக 38 தொகுதிகளையும், பாமக ஒரு தொகுதியையும் கைப்பற்றும் சூழலில் உள்ளது. விருதுநகரில் தேமுதிக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

SCROLL FOR NEXT