தமிழ்நாடு

நாம் தமிழா் கட்சியை விஞ்சிய பாஜக!

DIN

மக்களவைத் தோ்தலில், தமிழகத்தில் நாம் தமிழா் கட்சியை விஞ்சி, பெரும்பாலான இடங்களில் பாஜக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு பாஜக, நாம் தமிழா் கட்சி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பாஜகவைவிட நாம் தமிழா் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுக் காட்டட்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியிருந்தாா். அதற்கு, நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சி அதிக வாக்குகள் பெற்றுவிட்டால், தனது கட்சியையே கலைத்துவிடுகிறேன் என்று கூறியிருந்தாா்.

ஆனால், தோ்தல் முடிவில் பாஜக 11 தொகுதிகளில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. நாம் தமிழா் கட்சி எந்தத் தொகுதியிலும் 2-ஆம் இடத்தைப் பிடிக்கவில்லை. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 3-ஆம் இடத்தை பெரும்பாலான தொகுதிகளில் பெற்றுள்ளன. நாம் தமிழா் கட்சி ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் மட்டும் 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. நாம் தமிழா் கட்சி 4-ஆம் இடத்தையே அதிக இடங்களில் பெற்றுள்ளது. நாம் தமிழரை விஞ்சி, பாஜக முன்னிலையில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகையையொட்டி 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்: மத்திய அரசு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. வெற்றி!

நண்பர்களைத் தேடி... அனன்யா!

காஸா குறித்த அவதூறு பதிவு! பிரபல இயக்குநருக்கு வலுக்கும் கண்டனம்!

மழை மேடையில்... பவித்ரா!

SCROLL FOR NEXT