முகப்பு
தமிழ்நாடு

ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி வழங்க வேண்டும்: ப. சிதம்பரம்

Updated On : 10 ஜூன், 2024 at 5:26 AM
ப. சிதம்பரம்
பகிர்:

பாராளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இந்தியக் குடிமகன் என்ற முறையில் நேற்றுப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஒன்றிய அரசுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி தருக! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி நேற்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →