தமிழ்நாடு

அரசுத் திட்டங்களை அறிந்துகொள்ள வாட்ஸ் ஆப் சேனல்: தமிழக அரசு

தமிழக அரசின் திட்டங்கள் அறிந்திட புதிய சேனல் வாட்ஸ் ஆப் தொடங்கப்பட்டுள்ளது

DIN

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து அறிய செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 'வாட்ஸ் ஆப்' சேனலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், ஒவ்வொரு துறையும் சமூக வலைதளங்களில் தனித்தனியாக கணக்குகள் வைத்து, அதன்மூலம் துறை சார்ந்த அறிவிப்புகள், திட்டங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த கணக்குகளை மக்கள் பின்தொடர்வதன் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தகவலை தெரிந்து கொள்ள முடியும். மக்கள் தொடர்புத் துறை சார்பில் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் செயலி, யூடியூப் பக்கங்களை தொடர்ந்து, அதிக பயனர்கள் உள்ள வாட்ஸ்ஆப் வழியாகவும் அரசின் திட்டங்களை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ள 'TNDIPR, Govt. of Tamilnadu' என்ற பெயரில் புதிய வாட்ஸ் ஆப் சேனலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்ஆப் கணக்கின் சேனல் பகுதியில் இதனை பின்தொடரலாம் மற்றும் QR Code ஸ்கேன் செய்தும் பின்தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT