தமிழ்நாடு

கட்சிப் பொறுப்பிலிருந்து அமைச்சர் நீக்கம்!

விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

DIN

விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தானை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ப.சேகரை விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

அதேபோல், விழுப்புரம் தெற்கு திமுக மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி மறைவெய்திய காரணத்தால் தெ.கௌதம்சிகாமணி விழுப்புரம் தெற்கு திமுக மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனை

சலுகைக் கட்டணத்தில் சா்க்கரை நோய் பரிசோதனைகள்

ஓடும் ரயிலில் தவறி விழுந்த பிகாா் தொழிலாளி மீட்பு

உக்ரைனில் ரஷியா மீண்டும் கடும் தாக்குதல்

நிதி மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் தேவநாதன் சரண்

SCROLL FOR NEXT