முகப்பு
தமிழ்நாடு

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

“இரு மாநிலங்கள் இடையேயான பிணைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம்.”

Updated On : 12 ஜூன், 2024 at 8:04 AM
பகிர்:

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஆந்திரத்தின் முதல்வராக 4-வது முறையாக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தலைமையில் மாநிலம் செழிப்பும் நலனும் அடையட்டும். ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக இரு மாநிலங்கள் இடையேயான பிணைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →