முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் இணையும் எண்ணம் இல்லை: டிடிவி தினகரன்

அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பதே தவறான கேள்வி..

Updated On : 12 ஜூன், 2024 at 6:45 AM
அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்.
பகிர்:

தஞ்சாவூர்: அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை என்றார் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை தெரிவித்தது:

அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை. இந்த இயக்கத்தை எந்த நோக்கத்துக்காகத் தொடங்கினோமோ, அந்தக் காரணத்தில் எந்த விதத்திலும் அணு அளவும் மாற்றம் இல்லை. அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பதே தவறான கேள்வி. அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அதுபற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருப்பதால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

ஆனால் அதிமுகவுக்கு 2019ஆம் ஆண்டில் 20 தொகுதிகளில் பெற்ற வாக்கு விகிதம் இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது. திமுகவின் பி-டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுக தங்களது வேட்பாளர்களை நிறுத்தியது. என்றாலும் இதையெல்லாம் கடந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.50 சதவீதம் வாக்கு விகிதத்தைப் பெற்றுள்ளது. வருங்காலத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லாததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களிக்கின்றனர். ஆனால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்காததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்துள்ளது.

தமிழக அரசு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலமாக பிடிவாதமாக இருக்கும் கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் பேசி தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொது சிவில் சட்டத்தை ஜெயலலிதா ஆதரித்தார். அவரது வழியில் நாங்களும் அட்சட்டத்தை ஆதரிப்போம் என்றார் தினகரன்.

முழு கட்டுரையைப் படிக்க →