தமிழ்நாடு

அமித் ஷா என்ன சொன்னார்? - தமிழிசை அளித்த பதில்!

ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் அமித் ஷா பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழிசை செளந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

DIN

ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் அமித் ஷா பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழிசை செளந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, விழா மேடைக்கு வந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு கிளம்பினார்.

அப்போது அவரை அழைத்த அமித் ஷா, தமிழிசையிடம் ஏதோ சொல்ல அதற்கு தமிழிசையும் கணிவான முறையில் பதிலளித்தார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அமித் ஷா, காட்டமாக பேசினார். தமிழிசைக்கு ஏதோ அறிவுறுத்துகிறார் என்பது போல அமைந்திருந்தது அவரது பேச்சு. இரண்டு பேரும் பேசிக்கொள்வது சாதாரணமானதாக இல்லை என்பது, அவர்கள் அருகில் அமர்ந்திருப்பவர்களின் முகங்களிலிருந்தும் நன்றாகவே தெரிகிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் விடியோவில் பதிவாகி, ஊடகங்கள் வாயிலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த நிகழ்வு தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் பதில் அளிக்காமல், நன்றி தெரிவித்து வேகமாக சென்றுவிட்டார்.

பொதுவாக செய்தியாளர்களை தவிர்க்காத தமிழிசை செளந்தரராஜன் முதல்முறையாக இப்படி நடந்ததுகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT