வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை ஸ்டரகான்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடுவாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை ஸ்டரகான்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஸ்டரகான்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பி1 புளியந்தோப்பு போக்குவரத்து சரக காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஸ்டரகான்ஸ் சாலையில் சிஎம்ஆர்எல் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி 15.06.2024 முதல் 17.06.2024 வரை சோதனை அடிப்படையில் நடைபெற உள்ளது.
மேற்படி ஸ்டரகான்ஸ் சாலையில் அனைத்து வகையான வாகனங்களும் செல்ல தடை செய்யப்படுகிறது.
முற்றிலும் தடை விதிக்கப்படும் வாகனங்கள்
* கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான வாகனங்களும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை, டிமலெஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்கு, குக்ஸ் சாலை, குன்னூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகள் வழியாக ஸ்டரகான்ஸ் சாலைக்கு வந்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.
* ஸ்டரகான்ஸ் சாலைக்கு இருபுறமும் உள்ள உள்ளூர் குடியிருப்புவாசிகளின் வாகன இயக்கங்களுக்கு நியூ பெரன்ஸ் சாலை, செல்லப்பா தெரு ஆகிய சாலைகளை பயன்படுத்தி தங்கள் விரும்பும் இடங்களை அடையலாம்.
மாற்றுப்பாதை
உள்ளூர் குடியிருப்புவாசிகளின் வாகன இயக்கங்களுக்கான மாற்றுப்பாதை
உள்ளூர் குடியிருப்புவாசிகளின் வாகன இயக்கங்களுக்காக நியூபெரான்ஸ் சாலை, செல்லப்பா தெரு, அவதான பாப்பையா சாலை, சுப்பா சாலை, ரங்கையா சாலை, அஸ்டபுஜம் சாலை, வடமலை சாலை, தானா சாலை, மூக்கு சாலை, மாணிக்கம் சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்தி தங்கள் விரும்பும் இடங்களை அடையலாம்.
வாகன ஒட்டிகளும் மற்றும் பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.