தமிழ்நாடு

நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினரும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினரும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான பொருள்கள், பைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மாலை நேரத்தில் பயணிகள் அதிகளவில் வருகை தரும் வேளையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை வாகனங்களும் ரயில் நிலையத்தின் அருகே நிறுத்தப்பட்டுள்ளன, ரயில் நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT