கோப்புப் படம். 
தமிழ்நாடு

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் உற்சாகம்

DIN

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய இறைத்தூதர்களில் முக்கியமானவர்களின் ஒருவராக கருதப்படுபவர் இப்ராஹிம். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்லாமியர்களின் தியாகப் பெருநாளான பக்ரீத் பண்டிகை உற்சாகமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே மசூதிகளில் குவிந்தனர்.

தொழுகைக்கு பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்சங்கில் முதல்முறை ஓஐஎஸ் கேமரா! கேலக்ஸி எம் 17 அறிமுகம்!

வலுவிழந்த மோந்தா புயல்: மேற்கு வங்கத்தில் கனமழை!

சக்தித் திருமகன் கதை திருடப்பட்டதா?

அமைதியை ஏற்படுத்துபவர்! டிரம்ப்புக்கு தங்க கிரீடம் பரிசளிப்பு!

மாணவர்களை விளையாட்டுத் துறையில் சாதிக்க ஊக்குவிக்கும் அரசு: அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT