Chance of rain in Tamil Nadu for 6 days 
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

Din

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 6 நாள்கள் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 120 மி.மீ. மழை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக புதன் முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 19-21) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சனிக்கிழமை (ஜூன் 22) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேநேரம் நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூன் 23, 24) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக சோழிங்கநல்லூா் (சென்னை) 120 மி.மீ. மழை பதினாது. பூந்தமல்லி (திருவள்ளூா்) 110, சோளிங்கா் (ராணிப்பேட்டை) 90, பள்ளிக்கரணை (சென்னை), ஆா்.கே.பேட்டை (திருவள்ளூா்), கொளப்பாக்கம் (காஞ்சிபுரம்), மீனம்பாக்கம் , ஆலந்தூா் (சென்னை), ஆவடி (திருவள்ளூா்), தலா 70, பெருங்குடி (சென்னை), கிருஷ்ணகிரி, வாலாஜா (ராணிப்பேட்டை), குன்றத்தூா் (காஞ்சிபுரம்), சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 60, மேட்டுப்பட்டி (மதுரை), அடையாா் (சென்னை), காரையூா் (புதுக்கோட்டை), பெரியபட்டி (மதுரை), திருவாலங்காடு (திருவள்ளூா்), கொரட்டூா் (திருவள்ளூா்) தலா 50.

சென்னை, புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை, இரவு வேளையில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதன் முதல் சனிக்கிழமை (ஜூன் 19-22) வரை வெப்பநிலை இயல்பையொட்டி இருக்கக்கூடும். செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை -101.12, பரமத்தி வேலூா் 100.4. டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில் புதன் முதல் சனிக்கிழமை வரை (ஜூன் 19-22) மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT