மாணவர்களிடம் ஜாதிய வன்முறைகளை தவிர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு குழு அளித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என பாஜக கட்சித் தலைவர் ஹெச்.ராஜா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் மையக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீதிபதி சந்துரு அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது, கோயில்களில் தரப்படும் கயிறுகளை கட்டக்கூடாது எனச் சொல்வது பெரும்பான்மையான மதத்தினரை தாக்குவது போல உள்ளது. நீதிபதி சந்துருவின் உள்நோக்கத்தோடு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வட்டாரங்களில் எந்த சாதி முதன்மையாக உள்ளது என்பதை எப்படி தீர்மானிப்பீர்கள். இந்த பரிந்துரைகள் தீங்கிழைக்கக் கூடியன. இதனை நிராகரிக்க வேண்டும் எனக் கோருவது பாஜகவின் மையக்குழு தீர்மானம்” எனத் தெரிவித்துள்ளார்.
நான்குநேரியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-இல் ஜாதிய வன்மத்தால் பள்ளி மாணவா் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் ஜாதி, இன உணா்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிா்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
அந்தவகையில் ஓய்வுபெற்ற கே.நீதிபதி சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாா் செய்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.