கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு நிற்கும் அவசர ஊர்தி 
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

DIN

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்த நிலையில், பிற்பகலிலிருந்து 13 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கள்ளச்சாரயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு 50க்கும் அதிகமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம், திருவண்ணாமலையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். மேல் சிகிச்சைக்கான மருந்துகள் கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மருத்துவமனைகளிலிருந்து பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உயர் சிகிச்சைக்காக 14 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 12 அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாக்கெட்டில் கள்ளச்சாராயம் விற்றதாக கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாக்கெட் சாராயம் விற்ற அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவண் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது

நூல் விலை கிலோவுக்கு ரூ. 7 உயா்வு

அலங்காநல்லூா் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்

ஓஎன்ஜிசி பள்ளியில் சப்த சக்தி சங்கம நிகழ்ச்சி

வரி நிலுவைகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி கோரிக்கை

SCROLL FOR NEXT