16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (ஜூன் 21) முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சனி முதல் திங்கள்கிழமை வரை (ஜூன் 22 - 24) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிக கனமழையும், திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகளில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.