முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் சென்னை மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள்!

சென்னை மாநகராட்சிக்கான புதிய மேம்பாட்டு திட்டங்கள்!

Updated On : 21 ஜூன், 2024 at 4:20 PM
பகிர்:

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சென்னை மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெளியிட்டார்.

1. சென்னைப் பெருநகர் பகுதியில், 10 பொது நூலகங்கள் மின் - வழி கற்றல் மற்றும் பகிர்ந்த பணியிட (Co-Working Space) மையங்களாக ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

2. சென்னைப் பெருநகர் பகுதியில் கைவண்ணம் சதுக்கம் (சென்னை அங்காடி) ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

3. சென்னைப் பெருநகர் பகுதிக்கு வெள்ளக் கட்டுப்பாடு வரைபடம் (Flood Control Map) தயாரிக்கப்படும்.

4. மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் (Marina Heritage Corridor) ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

5. அண்ணா சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு உள்ளூர் பகுதி திட்டம்(Local Area Plan) தயாரிக்கப்படும்.

6. சென்னைப் பெருநகர் பகுதிக்கு நகர்ப்புற வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் (Urban Design Guidelines) உருவாக்கப்படும்.

7. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

8. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைநீர் வடிகால் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

9. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

10. சென்னைப் பெருநகர் பகுதியில் மூன்று பன்னோக்கு மையங்கள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

11. சென்னைப் பெருநகர் பகுதியில் அமைத்துள்ள சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

12. சென்னைப் பெருநகர் பகுதியில் அமைத்துள்ள 10 சுரங்கப்பாதைகள் ருபாய் 8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

13. சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள முக்கிய போக்குவரத்து சமிக்ஞைகள் (Traffic Signals) சூரிய சக்தியில் இயங்கும் வகையில் ருபாய் 5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். என்பன உள்ளிட்ட 46 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →