முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் உதயநிதிக்கு எதிராக வழக்குப் பதிய கா்நாடக உயா்நீதிமன்றம் தடை

சனாதன தா்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கு

Updated On : 21 ஜூன், 2024 at 7:57 PM
உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

சனாதன தா்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் நடந்த சனாதன எதிா்ப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சனாதன தா்மத்துக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்திருந்தாா். இதுதொடா்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின் உள்பட அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த வெங்கடேஷ், ஆதவன், மதுக்கூா் ராமலிங்கம் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கால அவகாசம் அளிக்கக் கோரி 4 போ் சாா்பில் முறைப்படி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனுவுக்கு எதிராக தடை கோரி கா்நாடக உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரா் தரப்பில் பதில் மனுவை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →