கோப்புப் படம். 
தமிழ்நாடு

நடிகர் விஜய் பிறந்த நாள்: இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து

DIN

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருவமான நடிகர் விஜய்க்கு இன்று 50வது பிறந்த நாள். இதையொட்டி விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயகுமார், டிடிவி தினகரனம், கே. அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்: பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பொதுப் பணியில் காலூன்றி உள்ள விஜய் பல்லாண்டு வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கு. செல்வப்பெருந்தகை: இளைய தளபதி என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 50-வது பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அவரை மனதார வாழ்த்துகிறேன்.

கலைத்துறையின் மூலம் தமிழக மக்களின் குறிப்பாக, இளைஞர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று வருகிற அவர் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்று, பொது வாழ்க்கையில் மேலும் சேவைகளை தொடர்ந்து செய்திட வாழ்த்துகிறேன்.

டி ஜெயகுமார்: ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல. மக்கள் பிரச்னைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று‌ விடுவார்கள். திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது!

கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல...பாமர மக்கள் மீதான அதிகார‌ தாக்குதல். எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன்‌ குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும்! மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது.

டிடிவி தினகரன்: தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய்க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய் பூரண உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கே. அண்ணாமலை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான சகோதரர் விஜய்க்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக, சமூகப் பொறுப்புடன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்திருக்கும் சகோதரர் விஜய்யின் கலை மற்றும் அரசியல் பணிகள், இனிதே சிறப்புற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

வானதி சீனிவாசன்: நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT