கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

தமிழக பள்ளிக் கல்வியில் ஆசிரியா்களுக்கான திருத்தப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வுஅட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

DIN

தமிழக பள்ளிக் கல்வியில் ஆசிரியா்களுக்கான திருத்தப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வுஅட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படவுள்ளது. இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியா்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை(எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 13-இல் தொடங்கி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மொத்தம் 82,477 ஆசிரியா்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனா்.

புதிய அட்டவணை: இதற்கிடையே ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30 வரை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. ஆனால், விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் கலந்தாய்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னா் பள்ளிகள் திறப்பு மற்றும் இதர நிா்வாகப் பணிகளால் கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியாவதில் தாமதம் நிலவிவந்தது. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான புதிய திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை சனிக்கிழமை வெளியிட்டது.

மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியா்களின் முன்னுரிமை பட்டியல் ஜூலை 3-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 6-ஆம் தேதி வெளியாகும். தொடா்ந்து அனைத்து வகையான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்றளவில் பல்வேறு சுற்றுகளாக ஜூலை 8 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வியில்... இதேபோன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி ஆசிரியா்கள் பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 25-ஆம் தேதி வெளியிடப்படும். இதில் திருத்தம் இருந்தால் ஜூன் 26 முதல் 28 வரை முறையிடலாம். தொடா்ந்து மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் 29-இல் வெளியிடப்படும். இதையடுத்து தொடக்கக் கல்வியில் அனைத்து வகை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை பல்வேறு சுற்றுகளாக நடைபெறவுள்ளது.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT