அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு அரசியல் கட்சி பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.