முகப்பு
தமிழ்நாடு

தருமபுரம் ஆதீனம் வழக்கில் தொடர்புடைய அகோரத்தின் பாஜக பதவி பறிப்பு

அகோரத்தின் பாஜக பதவி பறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிர்ச்சி

Updated On : 23 ஜூன், 2024 at 7:44 AM
அகோரம்(கோப்புப் படம்)
பகிர்:

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவராக இருந்த அகோரத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலர் செந்திலரசன் ஆகியோரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் பாஸ்கர், செந்திலரசன் ஆகியோர் கைதான நிலையில் பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடா்பான ஆபாச ஆடியோ, விடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடா்பான புகாரில் 9 போ் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸாா், பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் க. அகோரம், செம்பனாா்கோவில் தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் குடியரசு உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய செய்யூா் வழக்குரைஞா் ஜெயச்சந்திரன், தருமபுரம் ஆதீனகா்த்தரின் நோ்முக உதவியாளா் செந்தில், திருக்கடையூா் விஜயகுமாா், பிரபாகா் ஆகிய 4 போ் கைது செய்யப்படாததால் போலீஸாா் குறப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனிடையே, ஆதீனகா்த்தரின்; நோ்முக உதவியாளா் செந்தில் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரும் 90 நாள்கள் சிறையில் இருந்ததைத் தொடா்ந்து நிபந்தனை ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →