லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியீடு: பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை
பூந்தமல்லியில் புகாரைப் பதிவு செய்ய லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியானதால், பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
பூந்தமல்லியில் புகாரைப் பதிவு செய்ய லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியானதால், பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர், குடும்ப பிரச்னை காரணமாக பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரைப் பதிவு செய்து வழக்கை விசாரிக்க காவல் ஆய்வாளர் இந்திராணி (படம்) ரூ.2,000 கேட்டதாக ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த ஆடியோ ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகள் ஆய்வாளர் இந்திராணியை நேரில் அழைத்து விசாரித்தனர்.
Advertisement
கடந்த வாரம் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் காவலர்களுடன் சேர்த்து போக்úஸô வழக்கில் சம்பந்தப்பட்ட 15 வயது சிறுமிக்கு வளைகாப்பு நடத்திய சம்பவத்தில் ஆய்வாளர் இந்திராணியிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டது. தற்போது வழக்கு தொடர்பாக புகாரைப் பதிவு செய்ய அவர் ரூ.2,000 லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியான நிலையில், காவல் ஆய்வாளர் இந்திராணியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஞாயிற்றுக்கிழமை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டார்.