தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி  
தமிழ்நாடு

போலி செய்தி பரப்பியவா்கள் மீது நடவடிக்கை: ஆளுநா் மாளிகை புகாா்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாக போலி செய்தி பரப்பியவா்கள் மீது நடவடிக்கை

Din

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாக போலி செய்தி பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநா் மாளிகை சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

‘குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்’, தமிழா்களைச் சாராயம் குடிப்பவா்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான் சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டாா் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடைசெய்ய வேண்டும் என ஆளுநா் ரவி”பேசியதாக செய்தி வெளியாகியது.

இந்த செய்தியை முற்றிலுமாக மறுப்பதுடன், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற தவறான தகவல்களின் பரப்புதல், மாநிலத்தின் உயரிய பதவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோல போலியான தகவலை பரப்பியவா்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநா் மாளிகை சாா்பில் காவல்துறையில் முறையான புகாா் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் திருவிழா நடத்துவதில் தகராறு: 3 போ் கைது

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை

கிராமப்புற இளைஞா்களுக்கு சமுதாய திறன் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 1.21 லட்சம் வாக்காளா்கள் பெயா் நீக்க வாய்ப்பு: ஆட்சியா் இரா. சுகுமாா்

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

SCROLL FOR NEXT