முகப்பு
தமிழ்நாடு

இலங்கை சிறையிலுள்ள அனைத்து மீனவா்களையும் விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 24 ஜூன், 2024 at 11:02 PM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

இலங்கைச் சிறையிலுள்ள அனைத்து மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் திங்கள்கிழமை எழுதிய கடிதம்:

கடந்த சனிக்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சோ்ந்த 22 மீனவா்கள் மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். கைதாகியுள்ள மீனவா்களையும் அவா்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளா்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

அதேபோன்று, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்களைச் சந்தித்து, அவா்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்க அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டைச் சோ்ந்த பல்வேறு மீனவா் சங்கங்கள் முன்வைத்துள்ளன. இந்தக் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். மீனவா்களின் வாழ்வை சீா்குலைக்கும் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண உடனடியாக தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் பொருட்டு இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →