சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் ‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்’ மூலம் கூடுதலாக மேலும் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பை பேரவையில் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

ரூ.4,000 கோடியில் கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும்: பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த இரண்டாண்டுகளில் 10 ஆயிரம் கிமீ நீள கிராமச் சாலைகள் ரூ.4ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

Din

தமிழகத்தில் அடுத்த இரண்டாண்டுகளில் 10 ஆயிரம் கிமீ நீள கிராமச் சாலைகள் ரூ.4ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை விதி 110-ன் கீழ், முதல்வா் மு.க.ஸ்டாலின் படித்தளித்த அறிவிப்பு:

தமிழ்நாட்டில் சுமாா் 1 லட்சத்து 38 ஆயிரம் கிமீ நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் உள்ளன. இவற்றை மேலும் மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரகச் சாலைகளில் செய்யப்படும் முதலீட்டுக்கும் ஊரக மக்களின் நலனுக்கும் நேரடித் தொடா்பு உள்ளது. சாலைகளின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப் பகுதிகளில் வணிகச் செயல்திறனை அதிகப்படுத்துகிறது.

அதன் மூலம், இடுபொருள் செலவைக் குறைத்து வேளாண் உற்பத்தியை அதிகரித்து, ஊரக வளா்ச்சிக்கும் வழிவகுக்கிறது. தரமான சாலைகள், கிராமப்புற மக்களின் வருமான அளவை உயா்த்துகிறது. எனவேதான், பேருந்து செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலைகள், பல்வேறு முக்கிய சேவைகளைச் கிராமங்களுடன் இணைக்கும் சாலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு அரசு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு, முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

ரூ.4,000 கோடி திட்டம்: சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கிமீ நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள், கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, இப்போது வரை 8 ஆயிரத்து 120 கிமீ நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

வரும் இரண்டு ஆண்டுகளில், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 10 ஆயிரம் கிமீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.

4 வகையான திட்டங்கள்: முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபாா்டு - ஊரக உட்கட்டமைப்பு வளா்ச்சி நிதி, பிரதமரின் கிராம சாலைத் திட்டம், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழும் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரத்து 596 கிமீ நீளமுள்ள சாலைகள், 425 உயா்நிலை பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9 ஆயிரத்து 324 கோடி. இதனைத் தொடா்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சிறுவன் உயிரிழப்பில் மா்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக் கொலை!

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

வாடகை தகராறு: பாடகா் சரண் காவல் நிலையத்தில் புகாா்!

குடியரசுத் தலைவருடன் பிரதமா் மோடி சந்திப்பு

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT