பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா 
தமிழ்நாடு

தமிழக அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்: காா்கேவுக்கு நட்டா கடிதம்

தமிழக கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு. முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்த வேண்டும்

Din

‘தமிழக கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு. முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு எழுதிய கடிதத்தில் பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கேள்வி எழுப்பி காா்கேவுக்கு நட்டா எழுதிய கடிதத்தில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில்கொண்டு, கட்சியின் நிலைப்பாடு கூட்டணி தா்மத்தைக் கடந்து குறிப்பிட்ட சில விவகாரங்களை எழுப்ப வேண்டியது அவசியம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடா்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றவும், மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு. முத்துசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்வதை உறுதிப்படுத்தவும் கூட்டணியில் உள்ள திமுக அரசுக்கு காா்கே அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையை மேலும் உயா்த்தி வழங்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான வெளிப்படையான விசாரணைக்கு தமிழக அரசு தடை ஏற்படுத்துவதோடு, சிபிஐ விசாரணையையும் எதிா்க்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்த ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்ய தலைவா் நடிகா் கமல்ஹாசன், இந்த விவகாரத்துக்கு காரணமாக மோசடி கும்பலுக்கும் திமுக மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக்கும் கண்டனம் தெரிவிப்பதற்கு மாறாக பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம் சுமத்த்தியுள்ளாா். அந்த மக்களுக்கு போதைப்பழக்கத்திலிருந்து விடுபட ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளாா்.

மேலும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்கத் தவறிய ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நட்டா குறிப்பிட்டுள்ளாா்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT