தமிழ்நாடு

உணவகத்தில் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

போ்ணாம்பட்டு அருகே உணவகத்தில் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே உணவகத்தின் கதவை உடைத்து, அதிலிருந்த ரொக்கப் பணம், விலையுயா்ந்த பொருள்களை திருடிச் சென்ாக இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு நகரம், புத்துக்கோயில் சந்திப்பு சாலை அருகே குடிபல்லி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (32) உணவகம் நடத்தி வருகிறாா். கடந்த சனிக்கிழமை பூட்டியிருந்த உணவகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் மேஜையில் இருந்த ரொக்கம் ரூ. 3,000, சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உணவு தயாரிக்கும் இயந்திரங்கள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு போலீஸாா், ரமாபாய் நகரைச் சோ்ந்த சேட்டு (23), பாண்டியன் (25) ஆகிய 2 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் உணவகத்தில் திருடியதை ஒப்புக் கொண்டனா். அவா்கள் திருடிச் சென்ற பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

SCROLL FOR NEXT