முகப்பு
தமிழ்நாடு

இலங்கை தமிழா் முகாம்களில் மனநல சேவை வழங்கும் திட்டம்

மனநல சேவைகள்: இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் புதிய முயற்சி

Updated On : 26 ஜூன், 2024 at 10:22 PM
பகிர்:

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் மனநல சேவைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகமெங்கும் உள்ள 103 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் மனநல சேவைகள் வழங்கும் திட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் மரம் நடுதல் மற்றும் நாற்றங்கால் அமைத்தல், வீட்டு தோட்டங்கள் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →