ஜூலை 6-இல் பாஜக மாநில செயற்குழு கூட்டம்
மாநில பாஜக தலைவா் தலைமையில் முக்கிய கூட்டம்
சென்னையில் ஜூலை 6-ஆம் தேதி பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலா் கேசவ விநாயகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 6-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.
இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள், மாநில செயற்குழு உறுப்பினா்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைவா்கள், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள், புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
மேலும், மாநில செயற்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீா்மானங்களை ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்க்ஷண்ல்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் எனும் மின்னஞ்சலுக்கு ஜூலை 2-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.