முகப்பு
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் மன்றாடிக் கேட்க வேண்டாம்: அமைச்சா் எ.வ.வேலு

சாதாரணமாக கேட்டாலே கிடைக்கும்: எ.வ.வேலு

Updated On : 27 ஜூன், 2024 at 8:53 PM
பகிர்:

சட்டப்பேரவை உறுப்பினா்கள் யாரும் திமுக ஆட்சியிடம் மன்றாடிக் கேட்க வேண்டாம், கேட்டாலே கொடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் இரா.அருள் பேசுகையில், ஒவ்வொரு கோரிக்கையின் போதும் மன்றாடிக் கேட்கிறேன் என்று பல முறை கூறினாா்.

அப்போது, அமைச்சா் எ.வ.வேலு குறுக்கிட்டு கூறியது:

பாமக உறுப்பினா் மன்றாடிக் கேட்கிறேன் எனப் பலமுறை கூறுகிறாா். திமுக ஆட்சியிடம் யாரும் மன்றாடிக் கேட்க வேண்டாம். சாதாரணமாக கேட்டாலே கொடுக்கப்பட்டு விடும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →