திருப்பதி - காட்பாடி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா மெமு விரைவு ரயில், ஜூலை 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பதி - காட்பாடி இடையேயான ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியிலிருந்து காலை 6.50 மணிக்குப் புறப்படும் திருப்பதி - காட்பாடி முன்பதிவில்லா மெமு விரைவு ரயில் (வ.எண் 07659), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வழித்தடத்தில், காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட வேண்டிய காட்பாடி - திருப்பதி முன்பதிவில்லா மெமு விரைவு ரயில் (வ.எண் 07582), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட வேண்டிய காட்பாடி - ஜோலார்பேட்டை முன்பதிவில்லா மெமு விரைவு ரயில் (வ.எண் 06417), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வழித்தடத்தில், ஜோலார்பேட்டையிலிருந்து பகல் 12.45 மணிக்குப் புறப்படும் ஜோலார்பேட்டை - காட்பாடி முன்பதிவில்லா மெமு விரைவு ரயில் (வ.எண் 06418), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.