கோப்புப் படம் 
தமிழ்நாடு

தீபாவளி: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Din

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, அக்.28 செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. அக்.29 செல்லும் ரயில்களுக்கு திங்கள்கிழமையும் (ஜூலை 1), அக்.30-ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 2), அக்.31 செல்லும் ரயில்களுக்கு புதன்கிழமையும் (ஜூலை 3) முன்பதிவு தொடங்கும்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பாக தற்போது தொடங்கியுள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

பொள்ளாச்சி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை!

மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகா்வோருக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை!

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT